search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேச பிரதமர்"

    ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் வங்காளதேச பிரதமரின் பேரன் ஜயான் சவுத்ரி பலியாகிவிட்டது தற்போது தெரியவந்துள்ளது. #SriLankablasts #Colomboblast
    டாக்கா:

    வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

    இவரது மகள் ஷேக் சோனியா, தனது கணவர் மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் மகன்கள் ஜயான் சவுத்ரி (வயது 8), ஜோகன் சவுத்ரி ஆகியோருடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றார். இவர்கள் அங்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர்.



    இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் ஷேக் சோனியா குடும்பத்தினர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலிலும் குண்டு வெடித்தது.

    அப்போது ஓட்டலின் கீழ் தளத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் ஜயான் சவுத்ரி குண்டுவெடிப்பில் சிக்கினர். இதில், மஷியுல் ஹக்யு சவுத்ரி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜயான் சவுத்ரி மாயமானதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் ஜயான் சவுத்ரி பலியாகிவிட்டது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஷேக் செலிம் குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் ஜயான் சவுத்ரியின் உடல் நேற்று வங்காளதேசம் கொண்டு செல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  #SriLankablasts #Colomboblast
    மேற்குவங்காள மாநிலத்தில், வங்காளதேச பவனை திறந்து வைத்து பேசிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, ரவீந்திரநாத் தாகூரை சொந்தம் கொண்டாட அவர்களுக்கே அதிக உரிமை இருப்பதாக கூறினார். #BangladeshPM #SheikhHasina #Santiniketan #BangladeshBhavan

    கொல்கத்தா:

    வங்காளதேச விடுதலைப் போரின்போது இந்தியா, வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை பிரதிபலிக்கும் வகையிலும் மிகப்பெரிய அரங்கம் அமைப்பதற்காக, பிர்பம் மாவட்டம் சாந்தி நிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 35000 சதுர அடி நிலத்தை மேற்கு வங்காளம் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    அந்த இடத்தில் 25 கோடி ரூபாய் செலவில் வங்காளதேச பவன் என்ற பெயரில் புதிய அரங்கம் ஒன்றை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது.  இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் வங்காளதேச பவனை திறந்து வைத்தனர். விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.



    இந்த விழாவில் கலந்துகொண்ட வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா பேசியதாவது:-

    எந்தவொரு பிரச்சினையும் நட்பு பாராட்டுவதன் மூலம் தீர்க்க முடியும் என நான் நம்புகிறேன். நாம் இருவரும் அண்டை நாடுகள், எப்போதும் ஒன்றாக செயல்பட வேண்டும். அண்டை நாடுகளுக்கு இடையே சில பிரச்சினைகள் இருக்கலாம். பிரச்சினைகள் ஒவ்வொன்றாக சரிசெய்துள்ளோம். மற்ற சில பிரச்சினைகளை எழுப்பி இந்த விழாவின் சிறப்பை நான் உடைக்க விரும்பவில்லை.

    கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா - வங்காளதேசம் இடையிலான பன்முக மற்றும் மல மரிமான உறவுகள் புதிய உட்சத்தை தொட்டுள்ளது. நமது உறவுகள், மூலோபாய உறவுகளுக்கு அப்பாற்பட்டவை. வங்களாதேசம்-இந்தியா இடையிலான இருதரப்பு உறவு பெரும்பாலும் உலகின் மற்ற நாட்களுக்கு முன் மாதிரியாக கருதப்படுகிறது. வங்களாதேச விடுதலை போர், பாங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய ஆய்வுகளை ஆய்வு செய்ய ஒரு சிறந்த மையமாக அமையும்.

    இரு நாட்டு தேசிய கீதத்தையும் எழுதியவர், ரவீந்திரநாத் தாகூர் ஆவார். அவரை சொந்தம் கொண்டாட இரு நாட்டுக்கும் உரிமை உள்ளது. அவர் பெரும்பாலான படைப்புகளை வங்காளதேசத்தில் வைத்து தான் எழுதியுள்ளார். அதனால் அவரை சொந்தம் கொண்டாட எங்களுக்கு அதிக உரிமை உள்ளது.

    இவ்வாறு ஷேக் ஹசினா பேசினார். #BangladeshPM #SheikhHasina #Santiniketan #BangladeshBhavan
    ×